×

கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜ அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா. ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜ அரசைக் கண்டித்து ஜூன் 18ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், மதுரை, விரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் – மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜ அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP government ,DMK ,Chennai ,R. Rajiv Gandhi ,DMK government ,Tamil Nadu ,Keezhadi ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை