×

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

 

கோபி,ஜூன்13: ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூரில் செயல்பட்டு வரும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, வேங்கம்மையார் உயர்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முருகன்புதூரில் செயல்பட்டு வரும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கோபி நகராட்சி ஆணையாளர் சுபாஷினி தலைமை தாங்கினார்.

நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட குழு உறுப்பினரும் கோபி நகர இளைஞரணி அமைப்பாளருமான விஜய் கருப்புசாமி, கவுன்சிலர்கள் குமாரசீனிவாசன், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kobi ,Municipal High School ,Vengammayar High School ,Municipal Men's Secondary School ,Municipal Women's Secondary School ,Gobi Modachur ,Erode District ,Dinakaran ,
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது