×

மின்வாரிய ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 13: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (48). இவர் வீட்டின் எதிரே இரும்பு ஷீட்டை கொண்டு ஷெட் அமைத்துள்ளார். அதற்கு மேல் பகுதியில் உயர் அழுத்த மின்சார ஒயர் செல்கிறது. இதுபற்றி மின்வாரிய உதவி பொறியாளர் கார்த்திகேயனுக்கு புகார் சென்றது. இதன்பேரில், சம்பவ இடம் வந்த கார்த்திகேயன், அப்பகுதியில் உயர் அழுத்த மின்சார ஒயர் செல்வதால் அங்கு ஷெட் அமைக்க வேண்டாம் என தெரிவித்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவி, கார்த்திகேயனை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதுபற்றி கார்த்திகேயன், காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post மின்வாரிய ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Krishnagiri ,Ravi ,Mottur ,Kaveripatnam ,Krishnagiri district ,Electricity Board… ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு