×

சென்னையில் இன்ஸ்பெக்டர்கள் 21 பேர் பணியிட மாற்றம்; போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த உஷாராணி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சேகர் சிங் புதிய வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாமஸ் பேசின்பாலம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபக்குமார் திருமங்கலம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வராணி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன் யானைக்கவுனி சட்டம் ஒழுங்கு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் துறைமுகம் குற்றப்பிரிவு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த வனிதா விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயலட்சுமி ஸ்டான்லி அரசு மருத்துவமனை சட்டம் ஒழுங்கு, புதிய வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த கிருஷ்ணராஜ் நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு, தலைமை செயலக காலனி குற்றப்பிரிவில் இருந்த ஹரிஹரசுகன் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு குற்றப்பிரிவில் இருந்த உமா மகேஸ்வரி மத்திய குற்றப்பிரிவுக்கும், கோயம்பேடு குற்றப்பிரிவில் இருந்த கோமதி மத்திய குற்றப்பிரிவுக்கும், மீனம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த மங்களலட்சுமி மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த சிதம்பரபாரதி நொளம்பூர் சட்டம் ஒழுங்குக்கும், சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த முத்தேலு மத்திய குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஹேமாவதி சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், திருமங்கலம் சட்டம் ஒழுங்கில் இருந்த சுப்புலட்சுமி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பேசின் பாலம் சட்டம் ஒழுங்கில் இருந்த சிவகுமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், யானைக்கவுனி சட்டம் ஒழுங்கில் இருந்த சரவணன் செம்பியம் குற்றப்பிரிவுக்கும், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த ராஜேஸ்வரி மத்திய குற்றப்பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் இன்ஸ்பெக்டர்கள் 21 பேர் பணியிட மாற்றம்; போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Arun ,Police Commissioner ,Chennai Municipal Police ,Usharani ,Chennai Intelligence Unit ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...