×

அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியை தொடர விரும்புகிறோம்: ஒன்றிய அமைச்சர் மீண்டும் வாதம்

சென்னை: அறிவியல்பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியை தொடர விரும்பும் ஒன்றிய அரசிற்கு ஆதரவு அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமை கொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்கு பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியை தொடர விரும்பும் ஒன்றிய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்க தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் – பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியை தொடர விரும்புகிறோம்: ஒன்றிய அமைச்சர் மீண்டும் வாதம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Chennai ,Gajendra Singh Shekhawat ,Tamil Nadu government ,Union government ,
× RELATED சென்னையில் போக்குவரத்து நெரிசல்...