முஷ்ணம், ஜூன் 11: கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் தலை மறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் முஷ்ணம் பழனியாண்டவர் கோயில் தெருவில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த உண்டியலை கடந்த 2016ம் ஆண்டு 3 நபர்கள் உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை திருடிச் சென்றனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் பகுதியை சேர்ந்த வீராசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் வினோத்குமார், ராஜேஷ் ஆகிய 3 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் கோயில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராஜேஷை நேற்று முஷ்ணம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
The post கோயில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது appeared first on Dinakaran.
