×

ட்ரம்ப் அரசின் முடிவை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம்

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் அரசின் முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய ராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

The post ட்ரம்ப் அரசின் முடிவை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் appeared first on Dinakaran.

Tags : Riot ,United States ,Trump government ,Los Angeles ,President Donald Trump ,Los Angeles, California ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது