×

திருவாரூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், வீடு கட்டித் தருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சிவகுமார் – சுமதி தம்பதி உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கிறது. திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும். சுவாதி, சுவேதா இருவரும் அரசுப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சிவேஷ்வர் அரசு உதவிப்பெறும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சுமதி 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரும் உயிரிழந்தனர். பெற்றோரை இழந்த 3 குழந்தைகளிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசி ஆறுதல் கூறினார். கூத்தாநல்லூர் அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தெரிவித்தார்.

Tags : Government ,Thiruvaroor ,Principal ,M.U. K. Stalin ,THIRUVARUR ,MINISTER ,KUTTHANALLUR ,THIRUVARUR DISTRICT ,K. Stalin ,Sivakumar ,
× RELATED ஆஷஸ் தொடர்; 4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி!