×

சைக்கிளிங் லீக் போட்டி வெற்றி பெற்றவர்கள் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் 7 மற்றும் 8ம் தேதி 3.75 கி.மீட்டர் நீளமுள்ள தீவுத்திடல் பார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்ற பாதையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியை (3 வது சீசன்) நடத்தியது. இப்போட்டிகளில் 15 வீரர்கள் வரை கொண்ட வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளில் RANCYCERS அணியானது 64 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருச்சி Rockfort Riders அணியானது 54 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னை மாவட்டத்தை சேர்ந்த நம்ம சென்னை ரைடர்ஸ் அணியானது 38 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும் பிடித்தன. இந்த போட்டிகளில், சைக்கிளிங் வீரர் கிஷோர் இந்த பருவத்திற்கான சிறந்த வீரர் விருதினை பெற்றார். தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த குழுவினர் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, வெற்றி கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

The post சைக்கிளிங் லீக் போட்டி வெற்றி பெற்றவர்கள் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Cycling League ,Chief Minister ,Chennai ,Tamil Nadu Cycling Association ,Tamil Nadu Sports Development Authority ,Tamil Nadu Cycling League ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி...