×

என்.டி.பாலகிருஷ்ணாவின் 109வது படம் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரசிம்மா ரெட்டி‘ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் அவரது ஜோடியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கோபிசந்த் மல்லினேனி இயக்கி இருந்தார்.இந்த படத்தையடுத்து அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக லீலா நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் வில்லனாக நடிக்கிறார். படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் 109வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சர்தார் கபர் சிங், வால்டர் வீரைய்யா உள்ளிட்ட படங்களை இயக்கிய பாபி கொல்லி இயக்கவுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நேற்று முன்தினம் ஐதராபாத்தில் இப்படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

The post என்.டி.பாலகிருஷ்ணாவின் 109வது படம் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : NT Balakrishna ,Announcement ,Hyderabad ,Nandamuri Balakrishna ,Shruti Haasan ,Varalakshmi Sarathkumar ,Haniros ,Duniya Vijay ,ND Balakrishna ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...