×

ரஜினி கொடுத்த பரிசு: தமன்னா பூரிப்பு

சென்னை: ஜெயிலர் படத்தில் தன்னுடன் நடித்த தமன்னாவிற்கு, ரஜினிகாந்த் பரிசு ஒன்றை கொடுத்து உள்ளார்.‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து உள்ளார். தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. ரஜினியுடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தமன்னா, படப்பிடிப்பின்போது அவர் தனக்கு பரிசு கொடுத்ததாகவும் சொன்னார்.

ரஜினி, அதிகம் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர், தமன்னாவுக்கு ஆன்மிக பயணம் தொடர்பான புத்தகத்தை பரிசாக வழங்கி உள்ளார். இந்த புத்தகத்தில் ரஜினிகாந்த் கையெழுத்திட்டதாக தமன்னா கூறினார். ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்து உள்ளனர்.

The post ரஜினி கொடுத்த பரிசு: தமன்னா பூரிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajini ,Tamannaah Purippu ,Chennai ,Rajinikanth ,Tamannaah ,Nelson Dilip Kumar ,Sivakarthikeyan ,Vijay ,Sun Pictures ,Tamannaah Pooripu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி