×

லாரி-கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி-கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் திருச்சூரிலிருந்து பெங்களூருவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுகொண்டிருக்கும்போது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கொலசனஹள்ளி பகுதியில் கார் எதிரே சென்ற லாரியின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். டாம் சாக்கோ, அவரது தாய் மற்றும் சகோதரர்கள் ஆகியோர் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த சிபி சாக்கோ உடல் பாலக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post லாரி-கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Shine Tom Shacko ,Dharmapuri ,Sibi Shacko ,Hosur National Highway ,Palakkad, Palakkad ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி...