×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் மார்ச் 28ல் குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 7 முக்கிய பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளன.

குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 30 விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : D. N. B. S. ,Chennai ,D. N. ,D. N. B. S. C. ,Tamil Nadu ,Tamil Nadu Government Personnel Selection Board ,TNPSC ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை...