×

32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப்

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உளளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும் படம் ஜெயிலர். மற்றும் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்து வருகிறார். இதில் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 1991ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹம்’ என்ற படத்தில் ரஜினிகாந்த்- அமிதாப் பச்சன் இணைந்து நடித்திருந்தனர்.ஹம் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் இருவரும் 32 ஆண்டுகளுக்கு பின் 170வது படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற காவலராக ரஜினி நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

The post 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amitabh ,Rajinikanth ,Chennai ,Amitabh Bachchan ,Jailer ,Sun Pictures ,Nelson ,Rajini ,Lal ,Salaam ,Aishwarya Rajinikanth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED யுபிஐ செயலியில் பரிவர்த்தனை அறிவிக்க...