×

காசாவில் உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் துப்பாக்கிசூட்டில் 27 பேர் பலி

ரபா: போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்காக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற மனிதாபிமான அறக்கட்டளை சார்பில் உதவி மையங்கள் செயல்படுகின்றன. நேற்றுமுன்தினம் உதவி மையத்தை நோக்கி பாலஸ்தீன மக்கள் சென்றுள்ளனர். அப்போது திடீரென இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டது.

இதில்,27 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பிட்ட பாதையை விட்டு வேறு பாதையில் வந்த சந்தேக நபர்களை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என்றும் இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. துப்பாக்கிசூடு சம்பவத்தில் 27 பேர் இறந்தனர் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜெரீமி லாரன்ஸ் உறுதிப்படுத்தினார்.

The post காசாவில் உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் துப்பாக்கிசூட்டில் 27 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Raba ,Israel ,US ,Gazans ,Palestinians ,Israeli army ,Israeli ,Dinakaran ,
× RELATED உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரி...