×

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி கோப்பை வென்றதன் எதிரொலி : பிராண்ட் மதிப்பு 10% உயர்வு

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை அடுத்து அதன் பிராண்ட் மதிப்பு 10% உயர்ந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. 18 ஆண்டுகள் கழித்து முதல் கோப்பை வென்றது ஆர்.சி.பி.ஐ.பி.எல்-ல் முதல் முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதால் அணி வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதன் எதிரொலியாக ரூ.1000 கோடி என மதிப்பிடப்பட்ட பெங்களூரு அணி மதிப்பு மேலும் 10% அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வெற்றி மூலம் ஆர்சிபிக்கு மேலும் பல ஸ்பான்சர்கள் கிடைப்பர் என்றும் அதனால் வருவாய் பெருகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் ஐபிஎல் 2024 அறிக்கையின்படி, ஆர்சிபி மதிப்பு கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 67% அதிகரித்து ரூ.1000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பை வென்றதன் மூலம் ஆர்சிபி-யின் பிராண்ட் மதிப்பு மேலும் 10% உயரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே மதிப்பு ரூ.1149 கோடியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி மதிப்பு ரூ.1023 கோடியாகவும் உள்ளது. தற்போது, மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியாக ஆர்சிபி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி கோப்பை வென்றதன் எதிரொலி : பிராண்ட் மதிப்பு 10% உயர்வு appeared first on Dinakaran.

Tags : BANGALORE TEAM CUP ,IPL CRICKET SERIES ,Delhi ,Bangalore ,Bengaluru ,Punjab ,IPL ,Ahmedabad ,team cup ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர்...