×

பிறந்த நாள் வாழ்த்து தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறார் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2ம் நாளுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், இசைஞானி இளையராஜாவை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.

The post பிறந்த நாள் வாழ்த்து தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MK Stalin ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...