×

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கியது என்.ஆர்.காங்கிரஸ்!!

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் உடந்தையாக இருந்துள்ளார்.

இவ்வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய முக்கிய குற்றவாளி ராஜா, போலி மருந்து தொழிற்சாலை ஒப்பந்ததாரரான என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளன. இவர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து தலைமறைவாக இருந்த முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தியை ஓசூரில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில் போலி மருந்து விவகாரத்தில் கைதான என். ஆர். காங்கிரஸ் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்;
கா. மணிகண்டன் த/பெ காளியப்பன் எண்: 22, மாடன் ரைஸ் ஸ்டோர் வீதி, சோமா நகர். அரியாங்குப்பம் புதுச்சேரி இவர் மீது போலி மருந்து விவகார குற்றச்சாட்டு வழக்குப்பதியப்பட்டு காவல் துறை இவரை கைது செய்துள்ளனர்.

எனவே மேற்கூறிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இவரை அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவிலிருந்தும் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது.

Tags : NR Congress ,Puducherry ,IFS ,
× RELATED மாதவரத்தில் சாலையில் நடந்து சென்ற...