×

ஹீரோயினாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி

பாடகி ராஜலட்சுமி செந்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். ஜேஆர்ஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, ‘அய்யப்பனும் கோஷியும்’ தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, பைஜூ ஜேக்கப் இசை அமைத்துள்ளார். ஏ.இரமணிகாந்தன் பாடல்கள் எழுதியுள்ளார். எடிட்டர் ஆண்டனி உதவியாளர் வெரோனிகா பிரசாத் எடிட்டராக அறிமுகமாகிறார்.

ராஜலட்சுமி கூறுகையில், ‘இப்படத்தின் கதையைச் சொன்ன இயக்குனர், இதில் நான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்திருக்கும் பெண்ணாக என்னை கனவில் கூட பார்த்தது இல்லை. பைஜூ ஜேக்கப் இசையில் ஆல்பங்கள் மற்றும் படங்களில் பாடியுள்ளேன். நான் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கும் அவர் இசை அமைப்பது எனக்கான சிறப்பு என்று சொல்லலாம். 32 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மாவான நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை’ என்றார்.

The post ஹீரோயினாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajalakshmi ,Rajalakshmi Senthil ,Ganapathy Balamurugan ,N. Jeevanandham ,JRG Productions ,Radharavi ,Vijay Bharat ,Pash. Karupaiah ,Geetha Kailasam ,Abhi Nakshatra ,Tanya Ananya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 75வது குடியரசு தின விழாவில் பழங்குடியினர் தம்பதி