×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற குல்வீர்

குமி: ஆசிய தடகள சாம்பயன்ஷிப் 5000 மீட்டர் ஓட்ட போட்டியில், இந்திய வீரர் குல்வீர் சிங் அபாரமாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 5,000 மீட்டர் ஓட்ட போட்டியில் நேற்று இந்திய வீரர் குல்வீர் சிங் அசுர வேகத்தில் ஓடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். போட்டி துாரத்தை, 13:74:68 நிமிடங்களில் குல்வீர் சிங் கடந்து புதிய சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே, 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியவர்.

ஆடவர் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 20.98 நொடிகளில் ஓடி, அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர்கள் அமலன் போர்கொஹெய்ன், ராகுல் குமார், பிரணவ் குரவ், மணிகண்ட ஹோபிதார் 2ம் இடம் பிடித்தனர். ஆனால், அவர்கள் செய்த தவறுகளால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற குல்வீர் appeared first on Dinakaran.

Tags : Gulveer ,Asian Athletics Championships ,Gumi ,Asian Athletics Championship ,meter ,Kulvir Singh ,Gulveer Singh ,Kulvir ,Asian Athletics Championship 5000 meters ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...