×

சென்னை அருகே வரும் 10, 11ம் தேதி 1200 பேர் பங்கேற்கும் டிரையத்லான் போட்டி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு

சென்னை: சென்னை அருகே 1200 பேர் பங்கேற்கும் டிரையத்லான் போட்டிகள் வரும் 10 மற்றும் 11ம் தேதி நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வருகிற 10, 11ம் தேதிகளில் டிரையத்லான் போட்டிகள் சென்னை அருகே கோவளத்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 1.5. கி.மீ தூரம் நீச்சல், 40 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டுதல், 10 கி.மீ. தூர ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 1200 பேர் பங்கேற்க உள்ளனர். 10 நாடுகளைச் சேர்ந்த அத்லெட்டிக் மற்றும் நீச்சல் வீரர்கள் தமிழ்நாடு வீரர்களோடு இணைந்து போட்டிகளில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை நடத்த முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகளை நடத்த தேவையான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமையில் நேற்று கோவளத்தில் நடந்தது. கூட்டத்தில் காவல் துறை, தீயணைப்புத் துறை, கடலோரக் காவல் படை, மின்வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி ஒன்றியம், கோவளம் ஊராட்சி, வருவாய்த் துறை, மாசுகட்டுப்பாடு வாரியம், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலாசனை நடத்தினார். இதில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள முக்கிய போட்டி என்பதால், அனைத்து ஏற்பாடுகளையும் தரமான முறையில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், கோவளம் தீயணைப்பு அலுவலர் மூர்த்தி, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Chennai ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடி ஒட்டிய கிரிக்கெட் வீரருக்கு போலீசார் சம்மன்!