×

மகளிர் டி20 பிரிமீயர் லீக் பெங்களூரு அணிக்கு புது ஜெர்சி

புதுடெல்லி: அடுத்தவாரம் துவங்கவுள்ள மகளிர் டி 20 பிரிமீயர் லீக் போட்டிக்கான பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதிவரை நடக்கிறது. நவி மும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான பெங்களூரு அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிகப்பு பேண்ட், சிகப்பு மற்றும் அடர் ஊதா நிறத்துடன் கூடிய டி சர்ட்டில் வெள்ளை நிறத்தில் ஸ்பான்சர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. களத்தில் இந்த நிறங்களே எங்களின் ஆளுமையை பறைசாற்றும் என அணி நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

Tags : Women's T20 Premier League ,Bengaluru ,New Delhi ,T20 cricket match ,Women's Premier League ,WPL ,Navi Mumbai ,Vadodara ,
× RELATED ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடி ஒட்டிய கிரிக்கெட் வீரருக்கு போலீசார் சம்மன்!