×

பாகிஸ்தானுடன் இணைந்து காங். கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தலாம்: பாஜ விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘ராகுல்காந்தி மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தானுடனான தாக்குதலின்போது இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர். ஜெய்ராம் ரமேஷ் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்துக்கட்சி எம்பிக்களின் குழுக்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு கூறுகிறார். இந்த தலைவர்கள் பாகிஸ்தானின் போர்வீரர் போன்றவர்கள். ஜெய் பாகிஸ்தான் யாத்திரையை போன்ற ஜெய் ஹிந்த் யாத்திரையை காங்கிரஸ் நிறுத்திவைத்துவிட்டு பாகிஸ்தானுடன் கலந்து ஆலோசித்து கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த வேண்டும்” என்றார்.

The post பாகிஸ்தானுடன் இணைந்து காங். கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தலாம்: பாஜ விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Pakistan ,BJP ,New Delhi ,Sambit Batra ,Delhi ,Rahul Gandhi ,Telangana ,Chief Minister ,Revanth Reddy ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...