×

சேலம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு வாலிபர் உயிரிழப்பு: இணை நோய் காரணம் என டீன் தகவல்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் சேத்துக்குழி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (25), ஜேசிபி ஆபரேட்டர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தமிழரசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தமிழரசனுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தமிழரசன் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் கூறுகையில், “தமிழரசனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு இணை பாதிப்புகள் இருந்தது. இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்,’’என்றார்.

The post சேலம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு வாலிபர் உயிரிழப்பு: இணை நோய் காரணம் என டீன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Salem Hospital ,Salem ,Tamilharasan ,JCP ,Kolathur Chettuzhi ,Mattur, Salem district ,Salem State Medical College Hospital ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...