×

கமல்ஹாசனுக்கு எதிராக அவதூறு பரப்புவதா? – தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; “கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும், பதட்டமும் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கமல்ஹாசனுக்கு எதிராக அவதூறு பரப்புவதா? – தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,South Indian Actors Association ,Chennai ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை