- சென்னை
- 61 வது ஜவஹர்லால் நினைவு தினம்
- நேரு
- சத்யமூர்த்தி பவன்
- தமிழ் காங்கிரஸ் கட்சி
- தங்கபாலு
- திருநாவுக்கரசர்

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், ஜி.கே.தாஸ், இமயா கக்கன், மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வக்கீல் டி.செல்வம், அருள் பெத்தையா, முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், மயிலை அசோக் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் மக்கள் தொகையானது 150 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் தொகை, தேர்தல் முறை போன்றவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
The post ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது: திருநாவுக்கரசர் பேட்டி appeared first on Dinakaran.
