×

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு!!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முடித்து வைத்தது.கடந்த 2023-ல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி-யுமானபிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இரு எப்ஐஆர் பதிவு செய்தனர். அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. மற்றொன்று பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த பெண்ணின் தந்தை, தனது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக வாக்கு மூலம் அளித்தார்.

டெல்லி போலீசார் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்த நிலையில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் சிறப்பு POCSO நீதிபதி கோமதி மனோச்சா முன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.இதில், விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டு, பிரிஜ் பூஷனை வழக்கிலிருந்து விடுவிக்க போலீசாரால் சமர்ப்பிக்கப்பட்ட 500 பக்க அறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு, நீதிபதி கோமதி மனோச்சாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய டெல்லி காவல்துறைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் போக்சோ வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

The post இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Wrestling Federation of India ,president ,Brij Bhushan ,New Delhi ,Delhi ,Patiala Court ,POCSO ,Brij Bhushan Charan Singh ,BJP ,Brij Bhushan Charan… ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...