×

கொலை, பலாத்கார மிரட்டல் விடுத்தவர்களுக்கு நடிகர் ரவி மோகனின் காதலி பாடகி கெனிஷா நோட்டீஸ்

சென்னை: கொலை, பலாத்கார மிரட்டல் விடுத்தவர்களுக்கு பாடகியும் நடிகர் ரவி மோகனின் காதலியுமான கெனிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணத்திற்கு நடிகர் ரவி மோகனுடன் வந்த பாடகி கெனிஷாவை பார்த்து சமூக வலைதளங்களில் அவரை பற்றி ரசிகர்கள் அவதூறாக விமர்சித்தார்கள். ஆர்த்திக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் தனக்கு தெரபி கொடுக்குமாறு ரவி மோகன் தன்னை தொடர்பு கொண்டார் என கெனிஷா பிரான்சிஸ் விளக்கம் அளித்தார். மேலும் ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து விஷயத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தொடர்ந்து கூறி வருகிறார் கெனிஷா. உண்மை நிச்சயம் வெளியே வரும். அன்று உங்களுக்கு தெரியும் என்றார்.

இந்நிலையில் தனக்கு பலாத்கார மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்து போடப்பட்ட கமெண்ட்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு ‘கடவுளே இதை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன்’ என்றார். மேலும் ‘நான் தவறு செய்திருந்தால் நீ என்னை எரித்துவிடு இறைவனே’ என்றார் கெனிஷா. இருப்பினும் கெனிஷாவை சமூக வலைதளங்களில் விளாசுவது நிற்கவில்லை. இந்நிலையில் தான் வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார் கெனிஷா. அதாவது தன்னை பற்றி வெளியான செய்திகள், வீடியோக்கள், மோசமான கமெண்ட்டுகள், மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கெனிஷா சார்பில் அவரின் வழக்கறிஞர் குறிப்பிட்ட ரசிகர்களுக்கு எச்சரித்திருக்கிறார்.

The post கொலை, பலாத்கார மிரட்டல் விடுத்தவர்களுக்கு நடிகர் ரவி மோகனின் காதலி பாடகி கெனிஷா நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Ravi Mohan ,Kenisha ,Chennai ,Isari Ganesh ,Preetha ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது