×

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் தேர்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், காலியாவுள்ள இடங்களுக்கான மாநிலங்களைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என்.சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வைகோ, பி. வில்சன் ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிகாலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

அதே போல் அசாம் மாநிலத்தின் மிஷன் ரஞ்சன் தாஸ், பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகியோரது பதவிக்காலமும் வருகிற ஜுன் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, ஜூன் 9ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படும். தொடர்ந்து ஜூன் 19-ம் தேதி இரு மாநிலங்களில் காலியாகவுள்ள இடங்களில் மாநிலங்களைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதே தேதியில் குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக நேற்று(மே.26) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

The post தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Rajya Sabha ,Tamil Nadu ,Delhi ,Assam ,Anbumani Ramadoss ,M. Shanmugam ,N. Chandrasekaran ,Mohammed Abdullah ,Dinakaran ,
× RELATED ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில்...