×

தா.பழூர் விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி

 

தா.பழூர். மே.24: தா.பழூரில் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. சாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்ட பல்வேறு சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.வரும் ஜூலை 2ம் தேதி முதல் நாள்தோறும் யாகசாலை, கோபூஜை, ரக்ஷா பந்தனம், அங்குறார் பணம், பூர்ணா ஹூதி, புண்ணியாவாகனம், அனுக்ஞை உள்ளிட்டவை நடைபெற்று ஏழாம் தேதி அன்று காலை 10 மணி அளவில் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் மூலவர் கும்பாபிஷேகம் அதன் பின்னர் மகாதீபாராதனையும் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு மகாபிஷேகம் சாய ரக்ஷ பூஜை பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவில் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

The post தா.பழூர் விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Flag hoisting ceremony ,Viswanatha Swamy Temple ,Tha.Pazhur. ,Viswanatha ,Swamy ,Temple ,Saminatha Shivacharya ,Tha.Pazhur ,
× RELATED கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு...