×

பென்னிகுவிக் ஒரு காவல் தெய்வம்: அமைச்சர் ஆவடி நாசர் பெருமிதம்

சென்னை: இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர் பேசியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொறியாளராக இருந்த பென்னிகுவிக், தென் தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தளவில் ஒரு காவல் தெய்வம்.ஒவ்வோரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதியன்று, அவரது பிறந்தநாளை மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றனர். பென்னிகுவிக், அவர் பிறந்த லண்டனிலுள்ள கேம்பர்ளி பூங்காவில் அவரது சிலையை தமிழ்நாடு அரசு சார்பாக கடந்த 2022 அக்டோபர் மாதம் அன்று சிலை நிறுவ வைத்தவர் நம் முதல்வர்.

முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1896, 1897 ம் ஆண்டுகளில் தேனி உட்பட 5 மாவட்டங்கள் இந்த அணையால் சுமார் 50106 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. தற்போது முல்லைப் பெரியாறு அணை, தென் தமிழகத்தின் பாசனத்துக்கு முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது. முல்லைப் பெரியாறு அணை மூலம், மதுரையைச் சுற்றியுள்ள கம்பம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2.13 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. அணை மூலம், பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 80 லட்சம் மக்கள் வரை தினசரி குடிநீர் பயன்பெறுகின்றனர்.

அணை, பல ஆயிரம் சதுர கி.மீட்டரில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கிறது என பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது மேயர் லுவிஸ் பேர்ரி, துணை மேயர் கில்பர்ட் பட்டன், லன்டன் திமுக செயலாளர் செந்தில், சிப்பர்லி தமிழ் சங்கம் செயலாளர் சந்தானம், மாநில சிறுபான்மையினர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பென்னிகுவிக் ஒரு காவல் தெய்வம்: அமைச்சர் ஆவடி நாசர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Pennyquick ,Minister Avadi Nassar ,Chennai ,Tamil Nadu ,Minister ,Avadi Samu Nassar ,Colonel ,John Pennyquick ,Camberley ,England ,Chief Minister ,M.K. Stalin ,Avadi Nassar ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...