×

அமெரிக்காவுடன் மோதலா?.. இஸ்ரேல் பிரதமர் விளக்கம்


ஜெருசலேம்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, முதல் வெளிநாட்டு பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றார். இந்த பயணத்தின் போது பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு மட்டும் செல்லவில்லை.

இதனால், அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் ஏற்பட்டதே, டிரம்ப் அந்நாட்டுக்கு செல்லாததற்கு காரணம் என்று செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘10 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசினேன். அப்போது, உங்களுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் என்னுடைய முழு ஆதரவு உள்ளது என்று கூறினார்’ என்றார்.

The post அமெரிக்காவுடன் மோதலா?.. இஸ்ரேல் பிரதமர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : States ,Prime Minister of ,Israel ,Jerusalem ,Trump ,U.S. ,President ,Gulf ,United States ,Middle East ,
× RELATED சிரியாவில் மசூதி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி