×

பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்

சண்டிகர்: பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கி அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யு டியூபில், ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது கூட அந்நாட்டு உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு சொல்லியதாக அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை அதிகாரியிடம் பகிர்ந்ததாக மே 16 அன்று ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கி அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு 4 நாள்கள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Jyoti Malgodra ,Chandigarh ,Ariana ,Jyoti Malkotra ,Jyoti Malhotra ,Hisar District, Haryana State ,Pakistan ,
× RELATED 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!