- அமலாக்க இயக்குநரகம்
- கர்நாடக
- அமைச்சர்
- பரமேஷ்வர்
- பெங்களூரு
- தும்கூர்
- ஸ்ரீ சித்தார்த்த மருத்துவக் கல்லூரி
- ஸ்ரீ சித்தார்த்த தொழில்நுட்ப நிறுவனம்
- ஸ்ரீ சித்தார்த்த மருத்துவ அறிவியல் நிறுவனம்
- நெலமங்கல
பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சரான பரமேஸ்வர் தும்கூருவைச் சேர்ந்தவர். தும்கூருவில் பரமேஸ்வருக்கு சொந்தமான ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் பெங்களூரு புறநகர்ப்பகுதியான நெலமங்களாவில் உள்ள ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் ஆகிய கல்லூரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பரமேஸ்வருக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கான காரணம் வெளியாகாத நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பரமேஸ்வர், அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதுகுறித்து கேட்டறிந்து விட்டு பேசுகிறேன் என்றார்.
The post கர்நாடக அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.
