×

கலால் மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி கைது

ராஞ்சி: ஜார்க்கண்்ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் சவுபே, முதல்வர் ஹேமந்த் சோரனின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சவுபே தற்போது பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கலால் துறை செயலாளராக வினய் குமார் சவுபே பதவி வகித்தபோது கலால் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்து பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சவுபே மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று காலை சவுபேவை விசாரணைக்காக தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று, அவரிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிறப்பு நீதிபதி யோகேஷ் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

The post கலால் மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Jharkhand ,Ranchi ,Vinay Kumar Choubey ,Chief Minister ,Hemant Soren ,Choubey ,Principal Secretary ,Panchayat Raj Department ,Vinay Kumar ,Secretary of the ,Excise ,Department… ,Dinakaran ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...