- செபி
- புது தில்லி
- உச்ச நீதிமன்றம்
- இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
- அதானி குழு
- எங்களுக்கு
- ஹிந்தன்பர்க்
- அதானி குழுமம்…
- தின மலர்

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி குறித்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணை 2 ஆண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் விவரங்களை செபி சேகரித்து வருகிறது. ஆனால், அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்த மொரீசியசை சேர்ந்த எலாரா இந்தியா ஆப்பர்சூனிடீஸ் பண்ட் மற்றும் வெஸ்பெரா பண்ட் நிறுவனங்கள் விவரங்களை அளிக்காமலும், தாமதத்திற்கான காரணங்களை தெரிவிக்காமலும் உள்ளன.
இதனால் செபியின் விசாரணை 2 ஆண்டாக முடங்கியிருக்கும் நிலையில், 2 மொரீசியஸ் நிறுவனங்களுக்கும் அபராதம் மற்றும் உரிமம் ரத்து எச்சரிக்கையை செபி விடுத்துள்ளது. இதனால் அதானி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘ மிகப்பெரிய மோசடியை மறைக்க அரசு எவ்வளவு முயன்றாலும், உண்மை வெளிவருகிறது’’ என கூறி உள்ளார்.
The post அதானி பங்கு மோசடியில் மொரீசியஸ் நிறுவனங்களுக்கு செபி எச்சரிக்கை: தகவல்களை தராமல் இழுத்தடிப்பதா? appeared first on Dinakaran.
