×

பிறந்த 40வது நாளில் தத்து கொடுப்பு நெதர்லாந்திலிருந்து தாயை தேடி சேலத்திற்கு வந்த இளம்பெண்: 23 ஆண்டுக்குப்பின் சந்தித்து நெகிழ்ச்சி

காடையாம்பட்டி: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா பூசாரிப்பட்டி, தாசசமுத்திரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (50). இவருக்கு பிறந்து 11வது நாளேயான குழந்தை அமுதவல்லியை 23 ஆண்டுக்கு முன்பு, சேலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷினரியில் தத்து கொடுத்துள்ளார். அங்கு ஒப்படைக்கப்பட்ட அமுதவல்லியை, பிறந்த 40வது நாளில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் தத்தெடுத்து, கொண்டு சென்று வளர்த்து வந்தனர். பள்ளி படிப்பை முடித்த அமுதவல்லி, அந்த நாட்டிலேயே அலங்கார பூச்செண்டு விற்பனை மையம்(பிளவர் ஷாப்) நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, தனது பிறப்பு குறித்து அறிந்த அமுதவல்லி, பெற்றெடுத்த தாய் மற்றும் குடும்பத்தை பார்க்க விரும்பினார். கடந்த 2 ஆண்டுகளாக முகநூல், இன்டர்நெட் மூலம் தேடியும் பலன் கிடைக்கவில்லை. அதனை அறிந்த வளர்ப்பு பெற்றோர்களே, விவரம் தெரிவித்து, நேரில் பார்த்து விட்டு வருமாறு வாழ்த்தி அனுப்பினர். அதன்படி, நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த அமுதவல்லி, மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன், சேலம், தாசசமுத்திரம் வந்தார். அங்கு தனது வீட்டிற்கு சென்று தாயை கண்டதும், உணர்ச்சி பெருக்கில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். தத்து கொடுத்த மகளை பார்த்ததும் அவர் ஆனந்த கண்ணீர் வடித்தபடி, ‘‘23 ஆண்டுக்கு முன்பு கணவர் குடிப்பழக்கத்தால் என்னை கைவிட்டார். வறுமையில் இருந்ததால், எனது குழந்தை வேறு எங்காவது நல்ல முறையில் வளர தத்து கொடுத்தேன். 23 ஆண்டுக்கு பிறகு, மகள் என்னை பார்க்க வருவாள் என நான் கனவிலும் நினைக்கவில்லை,’’ என்றார்….

The post பிறந்த 40வது நாளில் தத்து கொடுப்பு நெதர்லாந்திலிருந்து தாயை தேடி சேலத்திற்கு வந்த இளம்பெண்: 23 ஆண்டுக்குப்பின் சந்தித்து நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Netherlands ,Kadaiyambatti ,Amuda ,Pusaripatti ,Dasasamutram ,Kadaiyambatti taluk ,Salem district ,Reunion ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...