- ஆஷ்லே டேனியலி
- இறுதியைத் திறக்கவும்
- மெல்போர்ன்
- ஆஷ்லே பார்தி-டேனியல்
- மகளிர் ஒற்றையர் பிரிவு
- ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம்
- தின மலர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் விளையாட ஆஷ்லி பார்தி-டேனியலி கொலின்ஸ் ஆகியோர் முதல்முறையாக தகுதிப் பெற்றுள்ளனர். அங்கு நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லி பார்தி(25வயது, 1வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்(26வயது, 51வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஆஸி ஓபனில் இருவரும் இதுவரை தலா 2 முறை அரையிறுதி வரை மட்டுமே முன்னேறியுள்ளனர். அதனால் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேற இருவரும் வேகம் காட்டினர். ஆனால் நெம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி ஒரு மணி 2 நிமிடங்களில் 6-1, 6-3 என நேர் செட்களில் மேடிசனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.அதேபோல் 2வது அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை டேனியலி கொலின்ஸ்(28வயது, 30வது ரேங்க்), போலாந்து வீராங்கனை (20வயது, 9வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் அதிரடியாக விளையாடிய டேனியலி ஒரு மணி 18 நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் வென்று முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். இதுவரை தலா 2 முறை ஆஸி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி இருந்த ஆஷ்லி, டேனியலி இருவரும் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளனர். அதனால் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்பவர் ஆஸி ஓபனின் புதிய சாம்பியனாக இருப்பார். …
The post ஆஸி. ஓபன் பைனலில் முதல்முறையாக ஆஷ்லி டேனியலி மோதல் appeared first on Dinakaran.