×

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

கம்பம், மே 17: கம்பம் நகராட்சி சேர்மன் வனிதா நெப்போலியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கம்பம் நகராட்சி சார்பில் நகராட்சி முழுவதும் வினியோகம் செய்யப்படும் குடிநீர் முல்லைபெரியாறு ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு லோயர் கேம்பில் நீரேற்று நிலையத்தில் இருந்தும் சுருளிப்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்தும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடுமையான கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிக ஆழத்திலிருந்து நீரை வெளியேற்றுவதால் மண் மணம் மற்றும் நீரின் அழற்சி வாடை ஏற்படுகிறது. தற்போது முல்லை பெரியாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் விநியோகம் செய்யப்படும் குடிநீர் சில நேரங்களில் கலங்கலாக வருகிறது. இந்த நீரை அப்படியே பருகினால் பல்வேறு உடல் உபாதைகள் உருவாகலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் குடிநீரை காய்ச்சி பின் வடிகட்டி பருகுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cumbum ,Cumbum Municipality ,Chairperson ,Vanitha Napoleon ,Mullaiperiyar River ,Lower Camp ,Surulipatti… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா