×

தேரோட்டத்தில் நகை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது

சிவகாசி, ஜன.7: சிவகாசி அருகே தேரோட்டத்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(58). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும்போது பையில் வைத்திருந்த பணப்பை காணாமல் போனது.

அதில் வங்கி ஏ.டி.எம். கார்டுகள், ரேசன் கார்டு, பான்கார்டு, இ.எஸ்.ஐ. கார்டு, ரூ.670 மற்றும் 37 கிராம் எடையுள்ள தங்க செயின் ஆகியவை இருந்துள்ளது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் முத்துலட்சுமி புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை திருடிய சிவகாசி புதுதெருவை சேர்ந்த முனியம்மாள், ஆறுமுகத்தாய் என்பது உறுதியானது. அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Sivakasi ,Muthulakshmi ,Viswanatham ,
× RELATED சென்னை காவல் துறையில் 21...