×

குன்னூர் உழவர் சந்தை அருகே புதர் மண்டிய சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

குன்னூர், மே 17: குன்னூர் உழவர் சந்தை அருகே புதர் மண்டிய சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து பெட்போர்டு பகுதிக்கு செல்வதற்கு மவுண்ட்ரோடு சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தாலும், சில சமயங்கள் மவுண்ட் ரோடு வழியாக போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிப்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் உழவர் சந்தை வழியாக சுலபமாக சென்று வருகின்றனர். ஆனாலும் தற்போது கோடை சீசன் துவங்கியதால் மவுண்ட் ரோடு பகுதியில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே உழவர் சந்தை வழியாக உள்ளுர் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள சாலையின் இருபுறமும் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட குன்னூர் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையின் இருபுறமும் புதர் மண்டிய பகுதிகளை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் உழவர் சந்தை அருகே புதர் மண்டிய சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coonoor Farmers Market ,Coonoor ,Bedford ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஹைபீல்டு சாலையில் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரங்களை அகற்ற கோரிக்கை