×

பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை… பிஎஸ்எல்லை கை கழுவிய இலங்கை வீரர் மெண்டிஸ்: குஜராத் அணியில் சேர்ந்தார்


புதுடெல்லி: பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் போட்டிகளில் ஆடி வந்த இலங்கை அதிரடி ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ், குஜராத் டைடன்ஸ் அணியில் சேர்ந்தது, பாக்.கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை போல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) என்ற பெயரில் டி20 போட்டிகளை, 8வது ஆண்டாக நடத்தி வருகிறது. இந்தியா – பாக். இடையே சமீபத்தில் ஏற்பட்ட உரசல்களை அடுத்து இரு நாடுகளிலும், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது நிலைமை சீரானதை அடுத்து, இந்தியாவில் ஐபிஎல், பாகிஸ்தானில் பிஎஸ்எல் போட்டிகள் இன்று முதல் நடக்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் பிஎஸ்எல் அணிகளில் ஒன்றான, குவெட்டா கிளாடியேட்டர்சில் இடம்பெற்றிருந்த இலங்கை அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான குசால் மெண்டிஸ், குஜராத் டைடன்ஸ் அணியில் சேர்ந்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால், குஜராத் அணியில் சேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளது, பாக். கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெண்டிஸ், கிளாடியேட்டர் அணிக்காக 5 போட்டிகளில் ஆடி, 143 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட், 168. குஜராத் அணியில் ஆடி வரும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், வரும் 29ம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். பட்லரின் இடத்தை மெண்டிஸ் நிரப்புவார் என குஜராத் அணி நிர்வாகிகள் கூறினர்.

The post பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை… பிஎஸ்எல்லை கை கழுவிய இலங்கை வீரர் மெண்டிஸ்: குஜராத் அணியில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,PSL ,Mendes ,Gujarat ,New Delhi ,Khusal Mendes ,Gujarat Titans ,Pak ,Gill ,IPL ,India ,Pakistan Cricket Board ,Gujarat squad ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்