×

விஜய் ஹசாரே கோப்பை பஞ்சாப் அணியில் சுப்மன் கில்

புதுடெல்லி: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 24ம் தேதி துவங்குகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாத, சுப்மன் கில், விஜய் ஹசாரே கோப்பைக்காக களமிறங்கும் பஞ்சாப் அணியின் 18 வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அந்த அணியில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் போன்ற பிரபல வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதனால், விஜய் ஹசாரே கோப்பைக்கான 50 ஓவர் போட்டிகளில் மோதும் அணிளில் பஞ்சாப், பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது.

Tags : Shubman Gill ,Punjab ,Vijay Hazare Trophy ,New Delhi ,World Cup T20 matches ,Vijay Hazare Trophy.… ,
× RELATED வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட்; 323 ரன்...