×

ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் செய்திகள் குஜராத் சமாச்சார் நாளிதழ் ஆசிரியர் பாகுபலி ஷா கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை


அகமதாபாத்: குஜராத்தில் வௌியாகும் முன்னணி நாளிதழ்களில் ஒன்று குஜராத் சமாச்சார். 93 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட குஜராத் சமாச்சாரின் வௌியீட்டாளரான லோக் பிரகாஷன் லிமிடெட் நிறுவன இயக்குநர் பாகுபலி ஷா, நாளிதழின் தலைமை ஆசிரியராகவும் பதவி வகிக்கிறார். லோக் பிரகாஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் பாகுபலி ஷாவுக்கு தொடர்புடைய அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 14ம் தேதி சோதனை நடத்தினர்.

சுமார் 36 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின்போது என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற தகவல்கள்வௌியாகவில்லை. இந்நிலையில் பாகுபலி ஷாவை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். அப்போது பாகுபலி ஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அகமதாபாத் நீதிமன்றம் அவரை நேற்றிரவு ஜாமீனில் விடுதலை செய்தது.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் செய்திகள் குஜராத் சமாச்சார் நாளிதழ் ஆசிரியர் பாகுபலி ஷா கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Samachar ,Bahubali Shah ,Ahmedabad ,Gujarat ,Lok Prakashan Limited ,Gujarat Samachar ,Lok Prakashan Limited… ,Gujarat Samachar Daily ,Government ,Dinakaran ,
× RELATED பாஜக – காங்கிரஸ் இடையே மோதல்;...