×

ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க கை கவசம் நன்கொடை: வைரம், ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளது


திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட 5 கிலோ எடை கொண்ட தங்க கை கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவர் சஞ்சய் கோயங்கா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் மூலவரின் கைகளுக்கு அணிவிக்க கூடிய வகையில் வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட 5.267 கிலோ தங்கத்தால் ரூ.3.63 கோடியில் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட தங்க கை கவசங்களை நன்கொடையாக ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சவுத்திரியிடம் வழங்கினார். அவர்களுக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.

The post ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க கை கவசம் நன்கொடை: வைரம், ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Ezhumalaiyan ,Tirumala ,Tirupati Ezhumalaiyan ,Sanjay Goenka ,IPL ,Lucknow Super Giants… ,
× RELATED இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில்...