×

தாழக்குடியில் வீட்டில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

ஆரல்வாய்மொழி, மே 17: தாழக்குடியில் வீட்டில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு ரத வீதியில் வீரகேரளப்பன் ஏரிக்குளத்தின் அருகே சங்கர நாராயணன் என்பவரது வீடு உள்ளது. இவர் வீட்டின் பின்புறம் மாடுகளை வளர்த்து வருகிறார். இதனால் கொட்டகை போடப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் மாட்டுக்கு தேவையான வைக்கோல்களும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் மாடுகளுக்கு உணவு வைப்பதற்காக கொட்டகைக்கு வீட்டில் உள்ள பெண்கள் வந்துள்ளனர். அப்போழுது மாட்டு கொட்டகையின் அருகே நின்ற ஒரு மரத்தின் மேல் பெரிய பாம்பு நெழிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி முன்னாள் பேரூராட்சி தலைவர் ரோகிணி அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே அங்கு வந்த இளைஞர்கள் பாம்பை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அங்கு வந்த வன ஊழியர்கள் மலைப்பாம்பை பெற்றுக்கொண்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.

The post தாழக்குடியில் வீட்டில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Thazhakudi ,Aralvaimozhi ,Sankara ,Narayanan ,Veerakeralappan lake ,North Rath Road ,Thazhakudi Panchayat ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...