×

தவெக மாவட்ட செயலாளர் கூட்டம்: நடிகர் விஜய் புறக்கணிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள் என அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமித்துள்ள தவெக, தொடர்ந்து அடுத்தக் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பனையூரில் இன்று காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஆனால் இதில் விஜய் பங்கேற்கவில்லை. இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பனையூரில்தான் விஜய்யின் பங்களா இருக்கிறது. அப்படி இருந்தும் அவர் கூட்டத்துக்கு வராதது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கான்பிரன்சிங்கிலாவது வந்து விஜய் பேசுவாரா என நிர்வாகிகள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post தவெக மாவட்ட செயலாளர் கூட்டம்: நடிகர் விஜய் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : DAWEKA DISTRICT SECRETARY ,ACTOR ,VIJAY BOYCOTT ,Chennai ,Tamil Nadu Legislative Assembly elections ,Tamil Nadu Victory Club ,Daveka District ,
× RELATED ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி...