சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பெரிய அளவில் செய்யப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலை மாறி, இப்போது டன் மரவள்ளிக் கிழங்கின் விலை ரூ.4700 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். மரவள்ளி சாகுபடியில் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய மரவள்ளிக் கிழங்குக்கு டன்னுக்கு ரூ.16,000 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஸ்டார்ச், ஜவ்வரிசி ஆகியவை சாகோசர்வ் வாயிலாக போட்டி ஏல முறையில் விற்பனை செய்யப்படுவதையும், அவற்றுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
