×

டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபாதை அடைப்பு, கோயில் இடிப்பு: எதிர்ப்பு தெரிவித்து ஜல் விஹார் மக்கள் போராட்டம்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதியான ஜல் விஹாரில் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த நடைபாதையை குடிநீர் வடிகால் அதிகாரிகள் திடீரென மூடியுள்ளனர். இப்பகுதியில் கோயில் ஒன்றும் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. தெற்கு டெல்லியில் உள்ளது ஜல் விஹார். ரயில் பாதையை ஒட்டியுள்ள இப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை 3,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய பகுதிக்கு வந்த டெல்லி அரசின் கட்டுப்பட்டில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கோயிலை புல்டோசர் கொண்டு இடித்து அகற்றினர். காலம் காலமாக பயன்படுத்தி வந்த நடைபாதையையும் அடைத்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே இப்பகுதி தமிழ் மக்களை பலி வாங்கும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அடைக்கப்பட்ட நடைபாதையை திறக்க வேண்டும் என்றும், இடிக்கப்பட்ட கோயில் கட்டித்தர வேண்டும் என்றும் ஜல் விஹார் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபாதை அடைப்பு, கோயில் இடிப்பு: எதிர்ப்பு தெரிவித்து ஜல் விஹார் மக்கள் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,of ,Jal Vihar ,Jal ,South Delhi ,Blockade ,People of ,Jal Vihar Protest ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...