×

நாட்டு துப்பாக்கி பறிமுதல் 2 பேருக்கு போலீசார் வலை

கிருஷ்ணகிரி, மே 16: கிருஷ்ணகிரி டவுன் போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ ஜோதிபிரகாஷ் மற்றும் போலீசார், டிசிஆர் சர்க்கிள் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்தவர்களை நிறுத்தி, அதில் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். அதில், ஒரு நாட்டு துப்பாக்கி, கரிமருந்து, 50 பால்ரஸ் குண்டுகள் இருந்தது. இந்த சோதனைக்கு இடையே, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தொடர்ந்து போலீசார், கர்நாடக பதிவெண் கொண்ட டூவீலர், நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்கள் பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாட்டு துப்பாக்கி பறிமுதல் 2 பேருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri Town Traffic Police ,SI ,Jyothiprakash ,TCR Circle ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு